ரஷிய ராணுவம் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தை இன்று தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இதுதொடராக டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் ஒப்லாஸ்ட் கவர்னர் விலாண்டைன் ரெஸ்னிசன்கோ கூறுகையில், “கிவொர்சியி மாவட்டத்தில் ஒரே இரவில் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் செஸ்டிர்னியா கிராமத்தில், ஒரு சில குடியிருப்பு கட்டிடங்கள் குண்டுவீச்சில் சேதமடைந்தன. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை” என்று தெரிவித்தார்.
தெற்கு உக்ரைனில் 18 ரஷிய வீரர்களை உக்ரைன் ராணுவம் தோற்கடித்துள்ளதாக தகவல் இதுதொடர்பாக உக்ரைனின் “தெற்கு” செயல்பாட்டுக் கட்டளை கூறுகையில், ஒரு ரஷிய Msta-B ஹோவிட்சர், ஒரு ZU-23 விமான எதிர்ப்பு துப்பாக்கி, இரண்டு சுயமாக இயக்கப்படும் மோட்டார் அமைப்புகள், இரண்டு வெடிமருந்து கிடங்குகள் மற்றும் ஐந்து கவச மற்றும் இராணுவ வாகனங்களை உக்ரைன் ராணுவம் அழித்தது என்று தெரிவித்துள்ளது.
கார்கிவ் மாகாணத்தில் ரஷியாவின் குண்டுவீச்சு தாக்குதலில் 2 பொதுமக்கள் காயமடைந்தனர். ரஷியப் படைகள் பெச்செனிஹி கிராமத்தின் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஒரு குழந்தை மற்றும் 64 வயதான நபர் ஒருவர் காயமடைந்ததாகவும், இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்களும் சேதமடைந்ததாகவும் கார்கிவ் ஒப்லாஸ்ட் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போர்: ரஷிய படை தாக்குதலில் பிரான்ஸ் வீரர் பலி உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 4 மாதங்களை கடந்து நீடித்துக்கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்களை ரஷிய படைகள் ஆக்கிரமித்துவிட்டன.
ஆனாலும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து ரஷிய படைகளை எதிர்த்து உறுதியுடன் சண்டையிட்டு வருகின்றனர். இந்த போரில் உக்ரைன் வீரர்களுக்கு ஆதரவாக அந்த நாட்டு மக்களும், அங்கு வாழும் வெளிநாட்டவர்களும் கையில் ஆயுதங்களை ஏந்தி ரஷிய படைகளை எதிர்த்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் உக்ரைன் வீரர்களுடன் கைகோர்த்து போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் நகரில் கடந்த வாரம் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைன் வீரர்களுடன் பணியில் இருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 20 வயது வாலிபர் படுகாயம் அடைந்தார். அதை தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை