இதன்காரணமாக குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தலைமையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சம்பவ இடத்தில் வீதித் தடைகளை அமைத்து பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன், அதிகளவான பொலிஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
வீதித்தடைகள் மீது ஏறி நின்று கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் எம்.பியான ஹிருணிகா பிரேமசந்திர ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தாம் அவ்விடம் வரும் வரை பாதுகாப்பு பிரிவினர் யாரும் அறிந்திருக்கவில்லையென கூறியுள்ளார்.
இந்நிலையில் திடீரென ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாசலில் ஹிருணிக்காவைக் கண்டதும் ஜனாதிபதி மாளிகையின் வாயில்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டது.
எனினும் ஹிருணிக்கா தரப்பினர், ஜனாதிபதியை கடுமையான வார்த்தைகளில் கூச்சலிட்ட வண்ணம் மாளிகையின் பிரதான வாயில் முன்பாக தரையில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்