Home இந்தியா மாணவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்குவது ஆசிரியர்களின் பங்கு மகத்தானது

மாணவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்குவது ஆசிரியர்களின் பங்கு மகத்தானது

by Jey

மாணவர்களிடையே தேசப்பற்றையும், சுதேசியையும் விதைக்க வேண்டியது நமது கடமை’ என கவர்னர் தமிழிசை பேசினார்.

நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி, கவர்னர் தமிழிசை, 75 பள்ளிகளை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை நேற்று துவக்கினார் முதல் கட்டமாக நேற்று 5 பள்ளிகளை பார்வையிட்டார்.

புதுச்சேரி லப்போர்த் வீதி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை பார்வையிட்டார். கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு, இணை இயக்குநர் சிவகாமி, பள்ளி முதல்வர் உடனிருந்தனர்.

அங்கு நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசுகையில் ‘மாணவர்களிடையே தேசப்பற்றையும், சுதேசியையும் விதைக்க வேண்டியது நமது கடமை. மாணவர்கள் தன்னம்பிக்கை, திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. ஆசிரியர்கள் சுட்டிக்காட்டும் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.

சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வாரம் ஒரு சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாற்றை படிக்க வேண்டும்’ என்றார்.பின்னர் எக்கோல் ஆங்கிலேஸ் பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

காராமணிகுப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்று, நீட் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். லாஸ்பேட்டை கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். இறுதியாக இந்திரா நகர் அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்று, மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

related posts