அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் 2017-21 வரை பதவி வகித்தார். அவரது ஆட்சிகாலத்தில் 2018-19 வரை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டவர் ஜான் போல்டன்.
இதற்கு முன்னதாக முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், பாரக் ஒபாமா ஆட்சிகாலத்திலும் ஜான் போல்டன் வெளியுறவுக்கொள்கைகள் தொடர்பாக முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.
ஈரான், சிரியா, லிபியா, வெனிசுவெலா, கியூபா, ஏமன், வடகொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசியல், ஆட்சியில் அமெரிகாவின் தலையீடு மற்றும் ராணுவ ரீதியிலான செயல்பாடுகளில் ஜான் போல்டன் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்நிலையில், வெளிநாடுகளில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைக்கு தான் உதவியுள்ளதாக ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த வன்முறை தொடர்பாக அந்நாட்டு தொலைக்காட்சியில் இன்று விவாதம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பங்கேற்ற ஜான் போல்டன், வெளிநாடுகளில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளுக்கு நான் உதவியுள்ளேன் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஆட்சி கவிழ்ப்பு திட்டங்களுக்கு உதவி செய்தவன் என்ற முறையில் கூறுகிறேன்… அமெரிக்காவில் அல்ல… மற்ற இடங்களில்… ஆட்சி கவிழ்ப்புக்கு அதிக வேலை செய்ய வேண்டும்’ என்றார்.
அவரது கருத்து தரப்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. 2019 வெனிசுலாவில் ராணுவ நடவடிக்கை தேவை என போல்டன் கூறிய நிலையில் அதற்கு அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு