கனடாவில் பூர்வ குடியின மக்கள் வாழும் பகுதிகளில் மீண்டும் கோவிட் தொற்று அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே சுகாதாரப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை நிலவும் நிலையில் நோய் தொற்று அதிகரிப்பானது பெரும் தாக்கத்தை செலுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார் ஏனைய பணியாளர்கள் பற்றாக்குறையாக இருக்கும் ஒரு சூழலில் இவ்வாறு நோய் தொற்று அதிகரித்துள்ளமை நிலைமையை மோசமடைய செய்யும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பூர்வகுடியின மக்கள் வாழும் சில பகுதிகளில் அண்மைய மாதங்களாககோவிட் தொற்று உறுதியாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.