Home இலங்கை ஜனாதிபதி பதவி விலகல் கடிதத்தை வழங்காவிட்டால் இறுதி முடிவு எடுக்கப்படும்

ஜனாதிபதி பதவி விலகல் கடிதத்தை வழங்காவிட்டால் இறுதி முடிவு எடுக்கப்படும்

by Jey

ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் தொடர்பில் அனைவரும் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிடம் வினவி வருவதால் அவர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றார் என கூறப்படுகின்றது.

இதே நேரம், பதில் ஜனாதிபதி ஒருவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை வழங்காவிட்டால், அவர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர் பதவியில் இருந்து விலகியவராக கருதப்பட்டு அதற்கான சட்ட ஆலோசனைகள் ஆராயப்படும் என சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

related posts