ஒன்றாரியோ மாகணத்தில் மீண்டும் எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக கனடா முழுவதும் எரிபொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரிப்பினை பதிவு செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
முதல்வர் டாக் போர்ட் தலைமையிலான ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் எரி பொருட்களின் விலையை குறைப்பதாக அறிவித்திருந்தது.
தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி மாகாணத்தில் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டு இருந்தன இந்த நிலையில் எரிவாயுவின் விலை மேலும் குறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் மாகாணத்தில் பதிவாகும் ஆகக் குறைந்த எரிவாயு விலை எதிர்வரும் நாட்களில் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.