போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 25 பேர் கைது செய்பய்பட்டுள்ளனர்.
ஒன்றாரியோ மாகாணத்தில் இவ்வாறு 25 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மொத்தப் பெறுமதி 1.7 மில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கொக்கேய்ன், மெதபெடமின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஓராண்டு காலமாக கண்காணிக்கப்பட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களிடமிருந்து ஆயுதங்களும் பணமும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.