Home விளையாட்டு உலகக்கோப்பையில் விளையாடும் 16 அணிகள்

உலகக்கோப்பையில் விளையாடும் 16 அணிகள்

by Jey

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந்திகதி முதல் நவம்பர் 13-ந்திகதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

இந்த போட்டிக்கு ஏற்கனவே 12 அணிகள் தகுதி பெற்றன.அதன் படி மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்ய தகுதி சூற்று ஆட்டங்கள் நடந்தன .கடந்த பிப்ரவரி மாதம் ஓமனில் நடந்த தகுதி சுற்று மூலம் அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தகுதி பெற்றன. உலகக்கோப்பை போட்டிக்கு கடைசி இரு அணிகளாக ஜிம்பாப்வேயும், நெதர்லாந்தும் தகுதி பெற்றன ..

ஜிம்பாப்வேயில் நடந்த தகுதி சுற்றில் ஆட்டத்தில் அரை இறுதியில் ஜிம்பாப்வே அணி 27 ரன்னில் பப்புவா நியூ கினியாவையும், நெதர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவையும் வீழ்த்தியது. இதனால் ஜிம்பாப்வேயும், நெதர்லாந்தும் தகுதி பெற்றன .

உலகக்கோப்பையில் விளையாடும் 16 அணிகள் விவரம் ; ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஜிம்பாப்வே, நெதர்லாந்து

related posts