கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் அதிக அளவில் வருகை தரும் சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவிக்கு இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு வாகனங்களில் வருகை தந்தனர். இவர்கள் ஆசை தீர அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
இதேபோன்று அருவியின் அருகிலுள்ள சிறுவர் பூங்க, அலங்கார நீரூற்று, பச்சைபசேல் புல்வெளி தோட்டம் ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். அருவியில்குளித்தும் நீச்சல் குளத்தில் நீந்தியும் பொழுது போக்கினர். அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் அப்பகுதியில் குளுகுளு சீசன் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.
மேலும், இன்று ஆடி மாதம் பிறப்பு என்பதால் அருவியின் அருகிலுள்ள திற்பரப்பு மகாதேவர் ஆலயத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகாமாக இருந்தது. திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அடிக்கடி இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.