கனடாவில் பணவீக்க வீதம் 8 வீதத்திற்கும் மேல் உயர்வடையும் என கனேடிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வாரத்தில் இவ்வாறு பணவீக்கம் உயர்வடையும் என குறிப்பிட்டுள்ளது.
பணவீக்கமானது சில மாதங்கள் வரையில் நீடிக்கும் என மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்லும் நிலையில் பணவீக்கம் ஏற்படுவது ஆச்சரியப்படுவதற்கல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 1983ம் ஆண்டில் பணவீக்கம் 7.7 வீதமாக காணப்பட்டது எனவும் தற்பொழுது அதனை விடவும் பணவீக்கம் உயர்வடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.