கனடாவிற்கான தனது விஜயம் குறித்து பாப்பாண்டவர் அறிவித்துள்ளார்.
தமது பிரார்த்தனைகளில் இணைந்து கொள்ளுமாறு புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் கோரிக்கை விடத்துள்ளார்.
வதிவிடப் பாடசாலைகளில் கனேடிய பூர்வகுடியின மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு மன்னிப்பு கோரும் வகையில் பாப்பாண்டவர் கனடா விஜயம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 24ம் திகதி பாப்பாண்டவர் ஏழு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கனடா புறப்படுகின்றார்.
இறைவனின் அருளால் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் காயங்களை ஆற்றவும் ஓர் முயற்சியாக தமது இந்த பயணம் அமையும் என எதிர்பார்ப்பதாக பாப்பாண்டவர் தெரிவித்துள்ளார்.