இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளுக்கு அதிக வெப்பம் குறித்த அம்பர் எச்சரிக்கை தொடங்கியுள்ளது.
திங்கள் முதல் செவ்வாய் வரை தெற்கு ஸ்காட்லாந்திற்கு வானிலை அலுவலக எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், இங்கிலாந்தின் முதல் முறையாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் வெப்பநிலை 30C (86F) ஐ தாண்டியது. Flintshire இல் அதிகபட்சமாக 32C வெப்பநிலை பதிவானது. திங்களன்று, 41C வெப்பநிலை பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை குறித்து தேசிய அவசரநிலையை அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 இல் கேம்பிரிட்ஜில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையான 38.7C ஐ விட, இங்கிலாந்தில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும்.
ஞாயிற்றுக்கிழமை, பிளின்ட்ஷயரில் உள்ள ஹவர்டன் 32C வெப்பநிலை பதிவானது – இது இதுவரை வேல்ஸின் இந்த ஆண்டின் வெப்பமான நாளாக அமைந்தது.
இங்கிலாந்தில் அதிகபட்ச வெப்பநிலை 31.2C ஆகும், இது நான்ட்விச், செஷயர் மற்றும் லிங்கன்ஷையரில் உள்ள கோனிங்ஸ்பை ஆகிய இடங்களில் பதிவானது. இங்கிலாந்தின் பிற பகுதிகளில் 30Cக்கு மேல் வெப்பநிலை பதிவானது.
வடக்கு அயர்லாந்தும் இதுவரை ஆண்டின் வெப்பமான நாளாக பதிவாகியது. டெர்ரிலின், கவுண்டி ஃபெர்மனாக்கில் 27.4C வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஸ்காட்லாந்தில் அதிகபட்சமாக 26C வெப்பநிலை பதிவானது என்பதும் குறிப்பிடத்தக்கது.