Home உலகம் கடலில் வேட்டையாடும் விலங்குகளின் கவனத்தை ஈர்த்த Lobster

கடலில் வேட்டையாடும் விலங்குகளின் கவனத்தை ஈர்த்த Lobster

by Jey

அமெரிக்காவை சேர்ந்த உணவகத்துக்கு அனுப்பப்பட்ட பார்சலில் மிகவும் அரியவகை ஒரேஞ்சு நிற Lobster அனுப்பட்ட சம்பவம் அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களை திகைக்க வைத்திருக்கிறது.

குறித்த உனவகத்திற்கு சமைப்பதற்காக கடலில் பிடிக்கப்பட்ட Lobsterகள் டெலிவரி செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்னர் இந்த ஹோட்டலுக்கு பார்சல் ஒன்று வந்திருக்கிறது.

அதில், இருந்த ஒரேஞ்சு நிற Lobsterரை ஊழியர்கள் பார்த்ததும், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இதனைஅடுத்து அதனை ஆய்வு செய்த ஹோட்டல் நிர்வாகிகள், உடனடியாக இதனை பாதுகாக்க முடிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள மிர்டில் கடற்கரையில் அமைந்துள்ள அக்வேரியத்துக்கு இந்த அரியவகை லாப்ஸ்டர் அனுப்பப்பட்டிருக்கிறது.

ஏனென்றால் ரெட் லாப்ஸ்டர் உணவகம் இங்கு பரிமாறப்படும் செட்டர் பிஸ்கட்களுக்கு பெயர்போனது. இந்த அரியவகை Lobsterடருக்கு செட்டர் என பெயரிட்டு உள்ளனர் ஹோட்டல் நிர்வாகிகள். கடந்த வாரம் இந்த Lobster, அக்வேரியத்துக்கு அனுப்பப்பட்டது.

மேலும், இந்த Lobster 30 மில்லியன்களில் ஒன்று என்கிறது இந்த உணவகம். இந்த வகை லாப்ஸ்டர் அசாதாரணமானது எனவும் கடலில் வேட்டையாடும் விலங்குகளின் கவனத்தை இந்த Lobster ஈர்க்கிறது என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

related posts