Home கனடா மொன்றியலில் சிறுவர்கள் அதிகளவில் நோயுறுகின்றனர்

மொன்றியலில் சிறுவர்கள் அதிகளவில் நோயுறுகின்றனர்

by Jey

மொன்றியலில் வழமைக்குமாறான அளவில் சிறுவர்கள் நோய்வாய்ப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மொன்றியலில் சிறுவர் மருத்துவமனைக்கு வழமைக்கு மாறான அடிப்படையில் சிறுவர் நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவுகளில் சிறுவர் நோயாளிகள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவசர சிகிச்சைகள் தேவைப்படாத சிறார்களை வைத்தியசாலைக்கு அழைத்து வர வேண்டாம் எனவும் அவர்களுக்கு மாற்று வழிகளில் சிகிச்சை அளிக்குமாறும் பெற்றோரிடம் மருத்துவமனை கோரியுள்ளது.

பாரதூரமான நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பாதுகாப்பதற்கு இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு நோயின் நிலைமைகளினால் இவ்வாறு சிறார்கள் மொன்றியல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 192 வீதம் என தெரிவிக்கப்படுகிறது.

வழமைக்கு மாறாக சிறுவர் நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் இது வைத்தியசாலை கட்டமைப்பிற்கு சவாலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்

related posts