Home இலங்கை இலங்கையில் ஏற்பட்டுள்ள கலவரம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கலவரம்

by Jey

இலங்கையில் ஏற்பட்டுள்ள கலவரம் மற்றும் போராட்டத்தால் இலங்கையில் உள்ள “இந்திய விசா மையத்தின்” இயக்குநர் விவேக் வர்மா படுகாயமடைந்தார். கொழும்பு அருகே நேற்று இரவு இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதனையடுத்து இந்திய உயர் ஆணைய அதிகாரிகள் இன்று விவேக் வர்மாவை சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த விஷயம் இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று கூறினர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கலவரம் மற்றும் போராட்டத்தால் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

“இந்திய மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் இடையிலான உறவுகள் எப்பொழுதும் சுமுகமாகவும் நட்புறவும் கொண்டவை. தற்போதைய சூழ்நிலையில், இலங்கையில் உள்ள இந்தியர்கள் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், அதற்கேற்ப அவர்களின் இயக்கங்கள் மற்றும் செயல்பாடுகளைத் திட்டமிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேவைப்படும்போது நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம்” என்று இந்திய உயர் ஆணையம் கூறியுள்ளது. கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதால், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.

இந்த நிலையில், இலங்கையில் பொது பாதுகாப்பு கருதியும், பொது ஒழுங்கை பாதுகாக்கவும், மக்களுக்கான அத்தியாவசிய வினியோகம் மற்றும் சேவைகளை பராமரிக்கவும் அவசரநிலையை பிரகடனம் செய்வதாக ரணில் தெரிவித்துள்ளார்.

related posts