திருவண்ணாமலையில் சுற்றித் திரியும் லண்டனை சேர்ந்த முதியவர் புற்றுேநாயால் அவதிப்பட்டு வருகிறார். அவர் தனக்கு சிகிச்சை பெற உதவி கேட்டு கோரிக்கை வைத்துள்ளார். புற்றுநோய் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உலகப் புகழ்பெற்ற கோவிலாகும். இங்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இங்குள்ள கிரிவலப் பாதையை சுற்றி ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். வெளிநாட்டு பக்தர்களும் அதிக அளவில் ஆன்மிக பயணமாக அடிக்கடி திருவண்ணாமலைக்கு வருகின்றனர்.
லண்டன் முதியவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் கிளைவ் பிரட்ரிக் நியூமேன் (வயது 79). ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்தார். நாளடைவில் அவர் திருவண்ணாமலைவாசியாகவே மாறி விட்டார். இந்தநிலையில் புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
தலையின் இடது பக்கம் முழுவதும் புண்கனாகி உள்ளது. இவர் திருவண்ணாமலை நகரின் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். அப்போது அவரின் நிலையை பார்த்த ஜம்மு காஷ்மீரை சேர்ந்த கோரப்சுதன் என்பவர் அவருக்கு உதவ முன்வந்தார். கோரப்சுதன் அந்த முதியவருக்கு அடைக்கலம் கொடுத்தார். கோரப் சுதன் தனது சொந்த மாநிலத்துக்கு விரைவில் திரும்ப உள்ளதால் லண்டனைச் சேர்ந்த முதியவர் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதுகுறித்து திருவண்ணாமலையை சேர்ந்த சமூக சேவகர் மணிமாறனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அந்த முதியவரை மீட்டு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார்.
சிகிச்சை இதுகுறித்து மணிமாறன் கூறுகையில், ”ஆன்மிக தேடலுக்கு வந்த லண்டனை சென்ற முதியவரை இங்குள்ள மக்கள் காளிபாபா என்று அழைத்து வந்தனர். அவரும் திருவண்ணாமலையில் சாதுக்களோடு சாதுவாக வாழ்ந்து வந்தார். தினமும் கிரிவலம் செல்வார். அவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ள நிலையில் உயிருக்கும் போராடி வருகிறார்.
அவர் குடும்பம் குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. அவர் தன்னுடைய ஆவணங்களையும் தொலைத்து விட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்” என்று கூறினார். ==== படம்