Home கனடா நாட்டில் பணவீக்கம் தொடர்ச்சியாக உயரும்

நாட்டில் பணவீக்கம் தொடர்ச்சியாக உயரும்

by Jey

கனடாவில் பண வீக்கம் தொடர்ச்சியாக உயிர்வடைந்து செல்லும் என மத்திய வங்கியின் ஆளுநர் டிப் மக்களம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு முழுவதிலும் பணவீக்க வீதம் ஏழு ஆக காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் பணம் வைக்க வீதம் எட்டு தசம் ஒன்றாக பதிவாகியுள்ளது.

இது கடந்த 1983 ஆம் ஆண்டின் பின்னர் பதிவான கூடுதல் வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

துரதிஷ்டவசமாக பண வீக்க வீதம் அதிகரித்துள்ளதாகவும் மக்களுக்கு இது கடினமானதாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த மாத பணவீக்க உயர்விற்கு எரிபொருள் விலை அதிகரிப்பு பிரதான ஏதுவாக அமைந்துள்ளது.

எனினும் மக்களுக்கு தேவையான பொருட்களை நிரம்பல் செய்வதற்கு பொருளாதாரத்தினால் முடியாத காரணத்தினால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும், பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பணவீக்க  இரண்டு வீதமாக குறைப்பதற்கு முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அது அவர் தெரிவித்துள்ளார்.

related posts