Home இந்தியா இந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

இந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

by Jey

‘உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ள காரணத்தால் மழையின் கடவுளான இந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஜாலா கிராமத்தைச் சேர்ந்தவர் சுமித் குமார் யாதவ். இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த பகுதியின் தாசில்தாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகார் மனுவில், ” இப்பகுதியில் பல மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் என அனைவரும் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

மழை இல்லாததால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நமது பயிர் விளைச்சலும் பாதிக்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார். மேலும் யாருக்கு எதிராக புகார் அளிக்கப்படுகிறது என்பது குறித்த படிவத்தின் கேள்விக்கு அந்த விவசாயி “கடவுள் இந்திரன் ” என குறிப்பிட்டுள்ளார்

related posts