நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரத்திற்கு மேல் விசாரணை அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமலாக்கத்துறைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் கர்நாடக சட்டசபை முன்னாள் சபாநாயகரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கேஆர் ரமேஷ் குமார் பங்கேற்றார்.
போராட்டத்தின் போது ரமேஷ் குமார் பேசுகையில், நேரு, இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் பெயரில் நாம் 3 அல்லது 4 தலைமுறைக்கு சம்பாதித்துவிட்டோம்.
தற்போது அந்த கடனை நாம் திரும்ப செலுத்தவில்லையென்றால் நாம் சாப்பிடும் உணவு புழுக்களால் பாதிக்கப்பட்டும் என நான் அஞ்சுகிறேன்’ என்றார்.