டொரன்டோ பெரும்பாக பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் எரிபொருளின் விலை வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் நாட்களில் மேலும் பெற்றோல் ஆறு சதத்தினால் எரிபொருட்களின் விலைகள் குறைவடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் பெட்ரோலின் விலை நான்கு சதங்களினால் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய நாட்களாக எரி பொருட்களின் விலைகள் குறைவடைந்து செல்லும் பாங்கினை டொரன்டோ பெரும்பாக பகுதியில் அவதானிக்க முடிகின்றது.
உக்ரைன் போர் உள்ளிட்ட காரணிகளினால் இவ்வாறு எரிபொருட்களின் விலைகள் அதிகரித்திருந்தன எனினும் ஒன்றாரியோ மாகாணத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்பட்டதனால் விலையில் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது