Home கனடா வெப்பநிலை அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை

வெப்பநிலை அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை

by Jey

கனடாவில் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது நாட்டின் அநேக பகுதிகளில் 30 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனேகமான மாகாணங்களுக்கு இந்த வெப்ப அலையினால் பாதிப்பு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரின்ஸ் எட்வர்ட் தீவுகள், நியூ பிறவுன்ஸ்விக், நோவா ஸ்கோட்டியா, ஒண்ட்ரியா மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களில் கடுமையான வெப்பநிலை நீடிக்கும் எனவும் மக்கள் இது தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வெப்ப நிலை காரணமாக ஈரப்பதனற்ற தன்மையும் வலி மாசடைந்த நிலையிலும் காணப்படலாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமைகளினால் ஆரோக்கிய கேடுகள் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

related posts