கனடாவில், உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில தசாப்தங்களில் இல்லாத அடிப்படையில் கனடாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது.
இதனால் உணவிற்காக கனேடியர்களினால் செலவிட முடியாத ஓர் சூழ்நிலை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
சில மாதங்களுக்கு முன்னதாக செலவிட்ட தொகையை விடவும் அதிகளவு தொகையை நுகர்வோர் செலவிட நேரிட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பின்மை பணவீக்கத்தை விடவும் மிகவும் ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.