உக்ரேனுக்கு மேலும் சுமார் 270 மில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி அர்த்தமற்ற சண்டைநிறுத்தத்தால் போர் நீடிக்கவே செய்யும் எனவும் கூறினார்.
முதலில் பறிகொடுத்த நிலப் பகுதிகளை மீட்க வேண்டும் என கூறிய அதிபர் ஸெலன்ஸ்கி அதற்குப்பிறகுதான் சுமுகமான பேச்சுவார்த்தை பற்றி யோசிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
அதேவேளை கைப்பற்றிய வட்டாரங்கள் ரஷ்யாவிடமே இருந்தால், மாஸ்கோவுக்கு ஆயுதங்களைச் சேகரிக்கவும் அடுத்த கட்ட போருக்குத் தயாராகவும் வாய்ப்புக் கொடுப்பதாக அது அமைந்துவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை உக்ரேனுக்கு மேலும் சுமார் 270 மில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்கும் குறிப்பில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.