Home கனடா டொரன்டோவில் போதைப்பொருள் மரணங்கள் தொடர்பில் எச்சரிக்கை

டொரன்டோவில் போதைப்பொருள் மரணங்கள் தொடர்பில் எச்சரிக்கை

by Jey

டொரன்டோ நகரில் மிதமிஞ்சிய அளவில் போதைப் பொருள் பயன்படுத்துவது காரணமாக ஏற்பட்ட மரணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி முதல் 21 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அதிகளவில் போதைப்பொருள் உட்கொண்டு சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மாதம் இதுவரையிலும் மிதமிஞ்சிய போதைப் பொருள் பயன்பாடு காரணமாக 21 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என டொரன்டோ பொதுச் சுகாதார அலுவலகம் கோரியுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் போதைப் பொருளை மூக்கினால் நுகர்தல் அல்லது புகைத்தல் காரணமாக ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

 

related posts