புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் கனடாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
6 நாள் விஜய மன்றம் மேற்கொண்டு அவர் கனடாவிற்கு வருகை தந்துள்ளார்.
பலன்கள் எதிர் நோக்கிய பல்வேறு அசௌகரியங்கள் தொடர்பில் கத்தோலிக்க தேவாலயங்கள் சார்பில் மன்னிப்பு கோரும் நோக்கில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
கத்தோலிக்க தேவாலயங்களினால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்த பழங்குடியின வதிவிட பாடசாலைகளில் பல்வேறு அடக்குமுறைகளும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் இடம் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தனது வருத்தத்தையும் இந்த தவறுகளுக்காக மன்னிப்பினையும் பாப்பாண்டவர் கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இந்த விஜயத்தின் போது பழங்குடியின தலைவர்கள் பலரை பாப் ஆண்டவர் சந்திக்க உள்ளார்.
மேலும் கனடாவின் பல்வேறு நகரங்களுக்கும் பாப்பாண்டவர் விஜயம் செய்ய உள்ளார்.
இந்த விஜயமானது மிகவும் நிதானமாக மேற்கொள்ள வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தமது பிரதான நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.