அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தற்போது சற்று குறைவடைந்திருந்தாலும், கிராமப் புறங்களுக்கு அவற்றை எடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளதாக அகில இலங்கை அத்தியாவசிய உணவு மொத்த சில்லறை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கிராமப் பகுதிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நேற்று குறித்த சங்கம் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவிடம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கொழும்பு புறக்கோட்டையிலுள்ள மொத்த வியாபாரிகள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பல நாட்களாக எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.