Home இந்தியா பாலியல் தொந்தரவு கொடுப்பவருக்கு கடும் தண்டனை- ஸ்டாலின்

பாலியல் தொந்தரவு கொடுப்பவருக்கு கடும் தண்டனை- ஸ்டாலின்

by Jey

சென்னை குருநானக் கல்லூரியில் 50வது பொன் ஆண்டு விழா இன்று (ஜூலை 26) நடந்தது.இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசியதாவது: சென்னையில் சீக்கியர் சிறுபான்மையினராக இருந்தாலும், நகர வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பு முக்கியம் வாய்ந்தது.

எத்தகைய சோதனைகளையும் வந்தாலும் எதிர்கொள்ளும் நிலையில் தமிழக மாணவர்கள் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் தற்கொலை முடிவுக்கு செல்லக் கூடாது.மாணவிகளுக்கு யாரேனும் பாலியல் தொந்தரவு செய்தால் தமிழக அரசு பார்த்து கொண்டு இருக்காது.

பாலியல் தொந்தரவு கொடுப்பவருக்கு கடும் தண்டனை வழங்கப்படும். கொரோனா தொற்றால் எனது தொண்டை பாதிக்கப்பட்டிருந்தாலும், தொண்டு பாதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்

related posts