புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் கனேடிய பூர்வகுடியின மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
வதிவிடப் பாடசாலைகளில் பூர்வகுடியின சிறார்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக அவர் இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
கத்தோலிக்க தேவாலயங்களினால் நிர்வாகம் செய்யப்பட்ட வதிவிடப்பாடசாலைகளில் இவ்வாறு அநீதிகள் இழைக்கப்பட்டிருந்தது.
பூர்வகுடியின மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டதாகவும் சிறார்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் பாப்பாண்டவர் கனடாவிற்கு நேரில் விஜயம் செய்து, பூர்வகுடியின மக்களின் எதிரில் நின்று மன்னிப்பு கோரியுள்ளார்.
ஸ்பெய்ன் மொழியில் பாப்பாண்டவர் மன்னிப்பு கோரியதுடன், அது ஆங்கில மொழியிலும் பூர்வகுடியின மக்களின் மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டது.