என்.டி.பி கட்சியின் ஒன்றாரியோ மாகாண முன்னாள் தலைவி என்ரியா ஹோர்வாத், ஹமில்டன் நகர மேயர் பதவிக்காக போட்டியிட உள்ளார்.
59 வயதான அரசியல்வாதியான ஹோர்வாத் தாம் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஹமில்டன் மக்களுடன் நீண்ட காலம் பல்வேறு பணிகளில் இணைந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் ஹமில்டனில் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது எவ்வாறான உறுதிமொழிகள் வழங்குவது என்பது குறித்து கருத்துக்களை தற்போதைக்கு வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.