Home உலகம் உலக சுகாதார ஸ்தாபனம் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

உலக சுகாதார ஸ்தாபனம் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

by Jey

குரங்கம்மை நோய் வேகமாக பரவி வரும் நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆண்கள் தங்களது பாலியல் துணைகளின் எண்ணிக்கையை வரையறுத்துக் கொள்ளுமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டெட்ரோஸ் அதானம் கோரியுள்ளார்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் மத்தியில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகை வெகுவாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

கண்டு பிடிக்கப்பட்ட 98 வீதமான குரங்கம்மை தொற்றாளிகள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என தெரிவித்துள்ளார்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பாலியல் துணைகளின் எண்ணிக்கையை வரையறுப்பதன் மூலமும் குரங்கம்மை நோய் பரவுகையை வரையறுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

related posts