வதிவிடப் பாடசாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக வெட்கமும் வேதனையும் அடைகின்றேன் என பாப்பாண்டவர் தெரிவித்துள்ளார்.
கனேடிய பழங்குடியின சிறார்களுக்கு இழைக்கப்பட்ட தகவறுகளுக்காக அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பாப்பாண்டவர் கனடாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில், கியூபெக்கில் மக்கள் மத்தியில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளில் பின்பற்றப்பட்ட கொள்கைகளினால் சிறார்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
பழங்குடியின மக்களுக்கு கிறிஸ்தவர்களினால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.