கனடாவில் குரங்கம்மை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குரங்கம்மை நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் காரணத்தினால் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கோரிக்க விடுக்கப்பட்டுள்ளது.
கடனாவில் 745 குரங்கம்மை தொற்று உறுதியாளர்கள் இதுவரையில் பதிவாகியுள்ளனர்.
கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
கியூபெக் மாகாணத்தில் 346 குரங்கம்மை தொற்று உறுதியாளர்கள் இதுவரையில் பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.