Home இலங்கை நாட்டின் வருமானம் சரக்கு ஏற்றுமதி மூலம் 20% அதிகரிப்பு

நாட்டின் வருமானம் சரக்கு ஏற்றுமதி மூலம் 20% அதிகரிப்பு

by Jey

இலங்கை நாட்டின் வருமானம் சரக்கு ஏற்றுமதி மூலம் 20% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் ஏற்றுமதி வருமானம் 1,208.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து, ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ஆடை, ரப்பர், தேங்காய் தொடர்பான பொருட்கள், உணவு மற்றும் பானங்கள், கடல் உணவுகள் ஆகியவற்றின் ஏற்றுமதி வருவாய் அதிகரித்துள்ளதால் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது.

 

related posts