5 ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதனால் பாதகமான சுகாதார விளைவுகள் ஏற்படாது என அரசாங்கத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுவாக 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பமானது மனித ஆரோக்கியத்திற்கும் ஏனைய விலங்குகளின் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தொழில்நுட்ப ரீதியாக நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த 5ஜி தொழில்நுட்பமானது உடல் ஆரோக்கியத்திற்கு கேடாகாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெற்றுக் கொள்ளப்பட்ட கதிர்வீச்சு பெறுதி தரவுகளை விடவும் தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தகவல்களின் அடிப்படையில் 5g தொழில்நுட்ப கதிர்வீச்சு பெறுதி குறைவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த ஆய்வு முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என 5ஜி தொழில்நுட்பத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
5g அண்டனாக்கள் முழு வீச்சில் இயங்காத சந்தர்ப்பங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் இந்த ஆய்வு அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
5ஜீ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யக் கூடாது என சுவிட்ச்லாந்து முழுவதும் சுமார் 3000 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.