நேபாளத்தில் இன்று (ஜூலை 31) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு, ரிக்டரில் 5.5 ஆக பதிவானது.
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து தென்கிழக்கே 147 கி.மீ. தொலைவில், திக்தெல் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது ரிக்டரில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால், நேபாளம், இந்தியா மற்றும் சீனாவில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன.
இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதி செய்துள்ளது.இதனால், வீடுகளில் இருந்த மக்கள் அச்சமடைந்து, பாதுகாப்பு தேடி சாலையில் தஞ்சமடைந்தனர்.