Home இந்தியா இந்திய வங்கிகளில் வைப்புத் தொகைக்கான வட்டியை அதிகரிக்க வாய்ப்பு

இந்திய வங்கிகளில் வைப்புத் தொகைக்கான வட்டியை அதிகரிக்க வாய்ப்பு

by Jey

இந்தியாவில் வங்கிகளில் கடன் பெறும் அளவு மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தற்போதைய பணவீக்கம் போன்ற பொருளாதார பிரச்னைகளால் இந்த அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என்கின்றனர். அதே சமயம் டெபாசிட்கள் அளவு பெரிதாக வளரவில்லை. இதனால் வைப்புத் தொகைக்கான வட்டியை அதிகரிக்க வாய்ப்புண்டு.

இது தொடர்பாக வங்கியாளர்கள் மற்றும் நிபுணர்கள் கூறுவதாவது: விலைவாசி உயர்வினால் மக்களிடம் சேமிப்பு குறைந்திருக்கிறது. அதனால் வைப்புத்தொகை வளர்ச்சி குறைந்துள்ளது. மேலும் டெபாசிட் செய்பவர்கள் தற்போது சிறந்த வருமானத்தை தேடி பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்டுகளில் பணத்தை போடுகின்றனர்.

டெபாசிட்டை அதிகரிக்க எச்.டி.எப்.சி., வெளிநாடு வாழ் இந்தியர்கள் வைத்திருக்கும் கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்கி , டெபாசிட்டை அதிகரிக்க தொடங்கியுள்ளது. பிற வங்கிகளும் இதேபோன்ற திட்டங்களைப் பின்பற்றலாம்.

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் உபரி நிதி மெதுவாக வெளியே எடுக்கப்படுகிறது. வங்கிகள் வைப்பு நிதியை உயர்த்திக்கொள்ள முடியாவிட்டால் கடன் தேவையை பூர்த்தி செய்ய தேவையான நிதியை சந்தையிலிருந்து திரட்ட வேண்டும்.

ஆனால் அங்கு அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும். இதனால் வங்கிகளின் லாபம் மற்றும் லாப விகிதம் அழுத்தத்தைச் சந்திக்கலாம். இது முதலீட்டாளர்களை கவலையடையச் செய்யும். உலகளாவிய காரணிகளால் ஏற்கனவே வங்கிப் பங்குகள் ஏற்ற இறக்கத்தில் உள்ளன. இது மேலும் வங்கிகளின் பங்கு விலைகளை சரிவடையச் செய்யக்கூடும்.

இந்திய வங்கிகளின் டெபாசிட் வளர்ச்சி, தற்போது 9.8% ஆக உள்ளது. கடந்த 14 மாதங்களாக ஒற்றை இலக்க வளர்ச்சியே காணப்படுகிறது. அதே சமயம் கடன் வளர்ச்சி ஜூலை 1 – 15 நாட்களில் 14.4% கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. தனிநபர் கடன்கள், அடமானங்கள், வாகனக் கடன்கள் போன்றவற்றை உள்ளடக்கிய சில்லறைக் கடன் வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. கார்ப்பரேட் கடன்களையே இவை மிஞ்சுகிறது. ​​கடன் வளர்ச்சி வாய்ப்புகள் நம்பிக்கைக்குரியதாகத் தோன்றினாலும், உயர் பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு நிலைமையை சிக்கலாக்கக் கூடும்.

related posts