கனடிய பிரதமர் ஜஸ்டின் டுடே விடுமுறையை கழிப்பதற்காக வெளிநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளார்.
பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு வாரங்கள் கஸ்டாரிக்காவில் தங்கி இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெளிநாட்டு பயணத்திற்கான சகல செலவுகளையும் பிரதமர் தனிப்பட்ட ரீதியில் செலுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நத்தார் விடுமுறை காலத்திலும் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் கஸ்டாரிக்காவில் விடுமுறையை கழித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட ரீதியான விஜய் மன்றை மேற்கொண்டாலும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பிரதமர் விமானப்படை விசேட விமானம் ஒன்றிலேயே பயணம் செய்ய வேண்டியுள்ளது.
கடந்த ஆண்டு கஸ்டாரிக்காவின் போது சுமார் 57 ஆயிரம் டாலர்கள் அரசாங்கத்திற்கு செலவானது என தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் தனது தனிப்பட்ட பயணத்திற்கு அரசாங்க நிதியை பயன்படுத்தினார் என குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.