அடிமைத்துவ செயற்பாடுகளுக்காக கனடா மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கறுப்பின மற்றும் பழங்குடி என சமூகங்களை சேர்ந்த மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு வந்த நிலைமைகளுக்கு இவ்வாறு மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டிலும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அடிமைத்துவத்திற்கு எதிரான நாள் கனடாவில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
1834 ஆம் ஆண்டு கனடாவில் அடிமைத்துவத்தை ரத்து செய்யும் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
பிரித்தானிய காலனித்துவ அமைப்புகளில் வெகுவாக இந்த அடிமைத்துவ அமைப்புகள் காணப்பட்டன.
இந்த சட்டத்தின் ஊடாக சுமார் 8 லட்சம் ஆபிரிக்கர்கள் மற்றும் பழங்குடி இனத்தவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற கருப்பினத்தவர்களுக்கு எதிரான திட்டமிட்ட இன ஒடுக்கு முறைகள் மன்னிப்பு கூற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அடிமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுத்தமைக்காக இவ்வாறு மன்னிப்பு கூற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க இனத்தவர்களே அதிக அளவில் இவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கறுப்பினத்தவர் கனடியர்கள் தொடர்ச்சியாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர் என தெரிவிக்கப்படுகிறது