Home உலகம் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி சீனா பயணத்திற்கு கடும் கண்டனம்

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி சீனா பயணத்திற்கு கடும் கண்டனம்

by Jey

தைவானை தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என கூறி வரும் சீனா அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசியின் அரசு முறை பயணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

மேலும், நான்சியின் இந்த பயணத்திற்கு அமெரிக்கா மிகப்பெரிய விலையை கொடுக்கும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், நான்சி பொலேசி தைவான் அதிபர் டிசைங்க் வென்னை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் நான்சி பொலேசி பேசியதாவது, உலகம் தற்போது ஜனநாயகம், சர்வாதிகாரம் ஆகிய இரண்டில் எதேனும் ஒன்றை தேர்தெடுக்கும் சூழ்நிலையில் உள்ளது. தைவானிலும், உலகின் பிற நாடுகளிலும் ஜனநாயகத்தை அமெரிக்கா இரும்புக்கரம் கொண்டு பாதுகாக்க உறுதியாக உள்ளது.

தைவானை அமெரிக்கா கைவிட்டுவிடாது. என்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த வருகை தைவானை அமெரிக்கா கைவிடாது என்பதை வெளிப்படுத்தும் செயல்’ என்றார்.

related posts