ஆண்களுக்கான டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 816 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 76 ரன்கள் குவித்ததால் அவர் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மற்ற இந்திய வீரர்கள் யாரும் டாப் 10 இடத்திற்குள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 818 புள்ளிகளுடன் தொடர்ந்து நீடிக்கிறார்,3வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 794 புள்ளிகளுடன் உள்ளார்.