நீதிமன்றத்திற்குள் போதைப்பொருள் தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருந்த போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.
வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி, கூண்டில் நிற்கும் போது அவரை இலக்கு வைத்து இரண்டு தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபர் ஏனையோரை அச்சுறுத்தி மேலுமொரு முறை துப்பாக்கிச்சூடு நடத்தி, நீதிமன்ற கட்டடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.