கனடாவில் தொழிலற்றோர் எண்ணிக்கையில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் எண்ணிக்கை வரலாறு காணாத அளவிற்கு குறைவடைந்துள்ளது.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
கடந்த ஜுலை மாதத்தில் வேலையற்றோர் எண்ணிக்கையானது 4.9 வீதமாக பதிவாகியுள்ளது.
பொதுத்துறைசார் பணியாளர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, சுயதொழில்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
1976ம் ஆண்டின் பின்னர் வேலையற்றோர் எண்ணிக்கை இந்த ஆண்டில் குறைவடைந்துள்ளது.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.