ஒன்றாரியோ மாகாணத்தில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
மாகாணத்தின் அனைத்து பிராந்தியங்களிலும் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒன்றாரியோ பொதுச் சுகாதார அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கோடை கால கோவிட் அலையொன்று ஏற்பட்டிருந்த நிலையில் தற்பொழுது நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை 10982 ஆக காணப்பட்டதாகவும், அதற்கு முன்னைய வாரம் 12092 ஆக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.