186 நாடுகள் இடையிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது.
ஓபன் (வீராங்கனைகளும் ஆடலாம்), பெண்கள் ஆகிய இரு பிரிவுகளில் நடக்கும் இந்த செஸ் திருவிழா 11 சுற்றுகளை கொண்டது. இதன் முடிவில் அதிக புள்ளிகளை குவிக்கும் அணி மகுடம் சூடும். இதுவரை 6 சுற்று நிறைவடைந்துள்ளது.
போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும். பெரும்பாலான வீரர், வீராங்கனைகள் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டு பரவசத்தில் ஆழ்ந்தனர். ஜாலியாக நேரத்தை செலவிட்ட அவர்கள் மனஅழுத்தத்தை குறைத்து புத்துணர்ச்சியுடன் அடுத்த சுற்றுக்கு தயாராகியுள்ளனர்.
7-வது சுற்று போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இதில் ஆண்கள் பிரிவில் இந்தியா ‘ஏ’ – இந்தியா சி அணியுடன் மோதுகிறது .இந்த சீசனில் இந்திய வீரர்கள் முதல் முறையாக நேருக்கு நேர் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியா ‘பி’ -கியூபா அணியை எதிர்கொள்கிறது மகளிர் பிரிவு: *இந்தியா ‘ஏ’ – அஜர்பைஜான் அணியுடன் இன்று மோதுகிறது *இந்தியா ‘பி’ – கிரீஸ் அணியை எதிர்கொள்கிறது *இந்தியா ‘சி’ – சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொள்கிறது