பூமி வேகமாக சுழல்வதாக சமீபத்திய ஆண்டுகளில் தரவுகளின் அடிப்படையில் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
கடந்த ஜூன் மாத இறுதியில் பூமி தனது மிகவும் குறைவான நாள் எது எனவும் பதிவு செய்துள்ளது. நோர்வே நேர மண்டல கண்காணிப்பு இணையதளம் ஒன்று ஜூலை 27ம் திகதி வெளியிட்ட ஆய்வறிக்கையில், ஜூன் 29 அன்று பூமி 24 மணி நேரத்திற்கு 1.59 மில்லி விநாடிகள் குறைவாக சுழற்சியை நிறைவு செய்தது என குறிப்பிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையின்படி, விஞ்ஞானிகள் பூமியின் சுழற்சி வேகத்தை அளவிட அணு கடிகாரங்களைப் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து பூமியின் மிகக் குறைவான நாள் இதுவாகும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், பூமியானது ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒரு சுழற்சியை முடிக்க இரண்டு மில்லி விநாடிகள் அல்லது அதற்கு மேல் எடுக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் பூமியின் சுழற்சி வேகம் மாறுகிறது எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மட்டுமின்றி, ஒரு நாளிலிருந்து அடுத்த நாள் வரை, பூமி ஒரு சுழற்சியை முடிக்க எடுக்கும் நேரம் ஒரு மில்லி வினாடியின் ஒரு பகுதிக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செல்கிறது.