Home உலகம் அனைத்து அகதிகளையும் மரியாதையுடன் நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

அனைத்து அகதிகளையும் மரியாதையுடன் நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

by Jey

அமெரிக்காவில் மெக்சிகோ எல்லையில் நுழைய முயன்ற சீக்கியர்களை தலைப்பாகையை அகற்றி சோதனை நடத்தப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் பலர் தஞ்சம் கேட்டு வருகின்றனர். எல்லையில் வரும் அகதிகளை அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பு சோதனை செய்கிறது.

கடந்த மாதத்தில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் இவ்வாறு மெக்சிகோ வழியாக வந்த 50 சீக்கியர்களை தலைப்பாகையை அகற்றச் சொல்லி பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் அந்த தலைப்பாகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு ‘அமெரிக்கன் சிவில் லிபர்டிஸ் யூனியன்’ என்ற மனித உரிமை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

அது அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு கமிஷனர் கிரிஸ் மேக்னசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.”அனைத்து அகதிகளையும் மரியாதையுடன் நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்” என கிரிஸ் மேக்னஸ் உறுதியளித்துள்ளார்.

related posts