ஆப்கானிஸ்தான் களநிலவரம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் தலீபான்களால் கடத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் உள்ள வியான் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளர் அனஸ் மல்லிக் என்பவர் ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் தலீபான்களால் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இப்போது ஆப்கானிஸ்தான் காபுலில், மல்லிக் பாதுகாப்பாக பத்திரமாக உள்ளார் என்பதை பாகிஸ்தான் தூதர் உறுதிப்படுத்தி உள்ளார். அல்கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்ட குறித்து செய்திகளை சேகரிக்க சென்றார்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு முதல் பத்திரிக்கையாளர் மல்லிக் கனாமல் போனதாக தகவல் வெளியானது. இரவு முதல் அவரை காணவில்லை என்று பரவலாக பேசப்பட்டது.
ஆப்கானிஸ்தான் சென்ற அவரை தலீபான்கள் கடத்திச் சென்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அவருடைய நண்பர்கள் இந்த தகவலை தெரிவித்தனர். அவருடைய மொபைல் போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகவும் அவர் எங்கு சென்றார் என்பதை தெரியவில்லை என்றும் கூறினர்