22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28 ஆம் திகதி தொடங்கின.
72 நாடுகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட காமன்வெல்த் போட்டி நேற்று நிறைவுபெற்றது. இதில், பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்ததை இளவரசர் எட்வர்ட் முறைப்படி அறிவித்தார்.
இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது இந்த நிலையில் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ,ஆடவர் ஹாக்கி அணி,சரத் கமல், பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.