Home கனடா றொரன்டோ வாழ் மக்களுக்கு குரங்கம்மை தடுப்பூசி

றொரன்டோ வாழ் மக்களுக்கு குரங்கம்மை தடுப்பூசி

by Jey

றொரன்டோ வாழ் மக்களுக்கு குரங்கம்மை நோய்த் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.

தகுதியானவர்கள் தடுப்பூசிக்காக தங்களை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரின் மருத்துவ சிகிச்சை நிலையங்களில் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.

இன்று காலை 9.30 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

றொரன்டோ பொதுச் சுகாதார முகவர் பதிவு முறைமையின் கீழ் பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓரினச் சேர்க்கையாளர்கள், மாற்றுப் பாலினத்தவர்கள், கடந்த 21 நாட்களுக்குள் பலருடன் பாலுறவு பேணியவர்கள் போன்ற சில தரப்பினர் இவ்வாறு தடுப்பூசி ஏற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு தடுப்பூசி ஏற்றப்படும் என்பது குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது.

related posts